அத்தியாவசிய பொருட்களை வாங்க கோயம்பேடு சந்தையில் குவியும் பொதுமக்கள்
பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறு அரசு வலியுறுத்தும் நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் அதிகளவில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
வழக்கமாக ஒருநாளிற்கு 450 லாரிகளில் காய்கறிகள் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது பல்பொருள் அங்காடிகள் அடைக்கப்பட்டதன் காரணமாக 550-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வருவதாகக் கூறப்படுகிறது.
ஆனாலும், கொரோனா அச்சத்தால் பொதுமக்களும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிப்பதால், காய்கறிகள் தேக்கமின்றி முழுவதுமாக விற்பனை ஆகி வருகிறது. அதேசமயம், சந்தையில் பொதுமக்களின் சுகாதாரத்திற்கென எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.
Comments