"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ஷீனா போரா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பீட்டர் முகர்ஜி ஜாமீனில் விடுதலை
ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பீட்டர் முகர்ஜி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி, தனது மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். பீட்டர் முகர்ஜிக்கு அவருடைய முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை, ஷீனா போரா முறை தவறி காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இந்திராணி, சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய், பீட்டர் முகர்ஜி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி பீட்டர் முகர்ஜிக்கு ஜாமீன் வழங்கியது.
Comments