உலகம் முழுவதும் கொரோனாவுக்கு இரண்டே முக்கால் லட்சம் பேர் பாதிப்பு

0 2525

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டே முக்கால் லட்சத்தை எட்டியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சீனாவில் இருந்து கடந்த ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் 186 நாடுகளில் பரவி உள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டே முக்கால் லட்சமாக அதிகரித்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

அனைத்து நாடுகளிலும் சேர்த்து நேற்று ஒரே நாளில் மட்டும் 1,282 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நேற்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

நாளுக்கு நாள் அதிவீரியத்துடன் வலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 7,800 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவில் கடந்த சில தினங்களாக உயிரிழப்புகள் ஏதுமற்ற நிலையில் நேற்றும் அதே நிலை தொடர்ந்துள்ளது. அங்கு மட்டும் 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக தொற்று ஏதும் அறிவிக்கப்படவில்லை. 

இந்நிலையில் அமெரிக்காவில் ஏற்கனவே 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மட்டும் 41 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் பாதுகாப்புத்துறை வளாகமான பென்டகனில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தொற்று நோய் காரணமாக அந்நாட்டு வர்த்தகத்தில் 4 டிரில்லியன் டாலர் அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்நாட்டின் முக்கிய விமான நிறுவனமான டெல்டா ஏர்லைன்ஸ் கடந்த காலாண்டை விட நடப்புக் காலாண்டில் தங்களுக்கு 80 விழுக்காடு வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் முதல் கொரோனா வைரஸ் அறிகுறி ஒருவருக்கு தென்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments