நாடு முழுவதும் நாளை 3,700 ரயில்கள் ரத்து...
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க 3 ஆயிரத்து 700 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்றிரவு 10 மணி முதல் நாளை இரவு 9 மணி வரை எந்த பயணிகள் ரயிலும் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கு முழுமையான வெற்றி பெற அனைத்து மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களும் நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அனைத்து இன்டர்சிட்டி ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில் மின்சார புறநகர் ரயில்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும் என்றும் சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நாளை காலை முதல் இரவு வரை மெட்ரோ ரயில்கள் ஓடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணத்தைத் திருப்பித் தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Comments