"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்கு நடைமுறைக்கு ஒத்துழைப்பு தாருங்கள் - ஆளுநர் வேண்டுகோள்
வரும் 22-ஆம் தேதி பிரதமர் அழைப்பு விடுத்துள்ள 'மக்கள் ஊரடங்கு'க்கு முழு ஆதரவு அளித்து அனைவரும் பங்கேற்குமாறு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரொனா தடுப்பு நடவடிக்கைகளில் இரவு, பகலாக ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான ஊழியர்களை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் மாலை 5 மணிக்கு அனைவரும் வீட்டு வாயில்கள், பால்கனிகளில் நின்று சுமார் 5 நிமிடம் வரை கைதட்டுமாறும் அவர் கேட்டுகொண்டுள்ளார்.
மாநில மருத்துவத் துறையினர் மாலை 5 மணிக்கு சைரன்கள் ஒலிக்கச் செய்யவும் அறிவுறுத்தியுள்ளார். மார்ச் 22 மக்களின் முயற்சி மற்று சுய கட்டுப்பாட்டின் அடையாள தினமாக அமையவேண்டும் என்றும், மக்கள் ஊரடங்கை வெற்றி பெறச் செய்வதன் மூலம் கிடைக்கும் அனுபவங்கள் எதிர்காலத்தில் புதிய சவால்களுக்கு நம்மை தயார்ப்படுத்திக்கொள்ள வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.
Comments