வங்கி ஏடிஎம் மையங்களால் வைரஸ் தொற்றும் அபாயம்..!

0 5431

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க கைகளை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி வரும் நிலையில், அத்யாவசிய தேவைக்க ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க செல்லும் வாடிக்கையாளர்களுக்கு வைரஸ் தொற்றும் அபாயம் உள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் கைகளை கழுவவும், கிருமி நாசினி கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்வதும் அவசியம் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், வங்கி ஏடிஎம் மையங்களை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களால் வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் யாரோ ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் கூட அவர் மூலம் அந்த ஏடிஎம் எந்திரத்தை பயன்படுத்தும் அத்தனை வாடிக்கையாளர்களுக்கும் பரவும்.

அத்யாவசிய தேவை என்பதால் திறந்து வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான வங்கிகள் அதன் ஏடிஎம் மையங்களை கண்டுகொள்ளவில்லை என்பதை காண முடிகிறது. 

எச்டிஎஃப்சி போன்ற ஒரு சில வங்கி கிளைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கிருமி நாசினிகள் மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

வங்கி ஊழியர்களும் முக கவசம், கையுறை அணிந்து வாடிக்கையாளர்களை ஒரு அடி தூரத்திற்கு முன்பே நிறுத்தி பணிகளை மேற்கொள்கின்றனர். வங்கி கிளையுடன் செயல்பட்டு வரும் ஒரு சில ஏடிஎம் மையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு காவலாளிகள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. ஏடிஎம் எந்திரங்களும் அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், தனியாக செயல்பட்டு வரும் ஏடிஎம் மையங்களில் இது போன்ற எந்த முன்னேற்பாடுகளும் இல்லை, காவலாளிகளும் இல்லை. அதிலும், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருக்கும் ஏடிஎம் மையங்களை பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் பயன்படுத்துகின்றனர். ஒரு சிலர் தங்களது பாதுகாப்பிற்காக கையிலேயே கிருமி நாசினிகளுடன் வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று நம் நாட்டில் சமுதாய தொற்றாக மாறவில்லை என சுகாதார அமைப்புகள் தெரிவித்திருந்தாலும், இது அடுத்தக்கட்டதிற்கு செல்லாமல் இருப்பது நமது ஒவ்வொருவர் கைகளிலும் தான் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவதே அனைவருக்கும் நலம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments