கொரோனா அச்சுறுத்தலால் உயர்நீதிமன்ற வளாகத்தில் கூட்டம் கூட வேண்டாம்

0 1425

கொரோனா அச்சுறுத்தலால் உயர்நீதிமன்ற வளாகத்தில் கூட்டம் கூட வேண்டாம் என தலைமை நீதிபதி ஏ.பி சாஹி கேட்டுக்கொண்டுள்ளார். 

இது குறித்து தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி வழக்கறிஞர்களுக்கு எழுதிய கடிதத்தில், இதற்கு முன் நாம் பார்த்திராத, எந்த ஒரு மருத்துவ தீர்வும் இல்லாத வைரஸாக கொரோனா இருப்பதாகவும், மக்கள் ஒன்றாக கூடாமல் இருப்பது கடினமாக இருந்தாலும், இந்த இக்கட்டான சூழலில் இதுபோன்ற கடினமான நடவடிக்கைகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கூட்டமாக இல்லாமல் இருப்பதும், பிறரிடம் இருந்து தள்ளியிருப்பதும் தான் இதற்கு தீர்வு என்பதால் உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், வழக்காடிகள் மற்றும் பார்வையாளர்கள் கூட்டம் கூட வேண்டாம் என்றும், இது தம்மை மட்டுமல்லாது மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டியது கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை ஒற்றுமையுடன் அனைவரும் கடமையாக ஏற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments