இணையத்தள வணிக நிறுவனங்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க திட்டம்
இணையத்தள வணிகத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பை ஏற்படுத்தவும், கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவரவும் அரசு திட்டமிட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் இணையத்தள வணிகம் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், இத்தகைய வணிக நிறுவனங்களை ஒழுங்குபடுத்தவும், கட்டுப்படுத்தவும் கொள்கையை உருவாக்குவதன் தேவை உணரப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களைக் கட்டுப்படுத்தப் புதிய கொள்கையை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட இணையத்தள வணிக நிறுவனங்கள் அரசின் பிடிக்குள் வரும். புதிதாக உருவாக்கப்பட உள்ள ஒழுங்காற்று அமைப்பு, இணையத்தள வணிக நிறுவனங்களிடையே முறையான போட்டியைப் பராமரிக்கவும், அத்தகைய நிறுவனங்களிடம் இருந்து நுகர்வோரைப் பாதுகாக்கத் தேவையான விவரங்களைக் கேட்டுப் பெறும் அதிகாரம் கொண்டதாகவும் இருக்கும்.
Comments