தமிழ்நாடு எல்லைகள் மூடல்
கொரோனா அச்சம் காரணமாக கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் எல்லைகளை, வருகிற 31 - ம் தேதி வரை மூட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சனிக்கிழமை முதல் இது அமலுக்கு வரும் என செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ள தமிழக அரசு, அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள், பெட்ரோல், மருந்துகள், சமையல் எரிவாயு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
இதனிடையே, வரும் 22 ம் தேதி அரசு போக்குவரத்துக்கழகங்களின் அனைத்து பேருந்துகளும் ஓடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பிரதமர் கூறியபடி, 9 அம்ச நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ள அவர், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மிகவும் அத்தியாவசிய பணிகளை தவிர, தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்குமாறும், தமிழக மக்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.
Comments