கொரோனா நோயாளிகளுக்கு உணவு, மருந்து வழங்கும் ரோபோ
கொரோனா தொற்று எதிரொலியால் சீனாவில் உணவகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த 100 கீனன் (Keenon) வகை ரோபோக்கள் மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர சீனா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், செவிலியர்களின் பணிச்சுமையை குறைக்கவும், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவாமல் இருக்கவும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த ரோபோக்கள் நோயாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று மருந்து மற்றும் உணவு பொருட்களை வழங்கும்.
Comments