கொரோனா அச்சம் : லே யூனியன் பிரதேசம் அதிரடி

0 2217

ஆட்டிப்படைக்கும் கொரோனாவுக்கு,  லே யூனியன் பிரதேசத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ள நிலையில், வெளி நாட்டவர்களுக்கும், வெளி மாநில சுற்றுலா பயணிகளுக்கும் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான உத்தரவை லே யூனியன் பிரதேச நிர்வாகம், அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்படி, எந்தவொரு வெளிநாட்டவரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை, லே யூனியன் பிரதேசத்திற்குள் நுழைய முடியாது.

இதேபோல வெளி மாநிலத்தவர் களும் உள்ளே வரக் கூடாது என திட்டவட்டமாக  அறிவித்துள்ள லே யூனியன் பிரதேச நிர்வாகம், கொரோனா தடுப்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

ஒரே இடத்தில் பொதுமக்கள் பெருமளவில் கூடுவதை தவிர்த்து, அவரவர் தங்கள் வீடுகளுக்குள்ளேயே தங்கி இருக்குமாறு, அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments