7 பேர் விடுதலை தொடர்பாக உறுப்பினரின் கேள்விக்கு அமைச்சர் பதில்

0 1900

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநரின் பதிலைப் பொறுத்தே அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் எனச் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், 7 பேரை விடுதலை செய்வதே தமிழக அரசின் நிலைப்பாடு எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாகப் பதிலைத் தெரிவிக்க ஆளுநரின் செயலகத்துக்கு உள்துறைச் செயலாளர் கடிதம் அனுப்பியதாகத் தெரிவித்தார்.

ராஜீவ் கொலை வழக்கில் சதித் திட்டங்களை ஆராய மல்ட்டி டிசிப்ளினரி மானிட்டரிங் ஏஜென்சி விசாரிப்பதாகவும், இந்த விசாரணை முடிவைப் பொறுத்தே பதில் அளிக்க முடியும் என்று ஆளுநரின் செயலகம் பதில் அளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஆளுநரின் பதிலைப் பொறுத்தே அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments