சீனா ஏற்பாடு செய்திருந்த வீடியோ கான்பரஸ் கலந்துரையாடலில் இந்தியா பங்கேற்பு
கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சீனா ஏற்பாடு செய்திருந்த வீடியோ கான்பரன்சிங் கலந்துரையாடலில், இந்தியா பங்கேற்றது.
இந்த ஆலோசனையில், தெற்கு ஆசியாவின் 10 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டு, உலகை உலுக்கும் கொரோனா குறித்து விவாதித்தனர்.
கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் அண்டை நாடுகள் மேற்கொள்ளும் பணிகளுக்கு உதவ தயார் என இந்த கலந்துரையாடலின் போது, சீனா உறுதி அளித்தது.
தெற்கு ஆசியாவில், கொரோனாவை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், இனி, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பிரதிநிதிகள் விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments