கொரோனா குறித்த பரிசோதனைக்கு 18 நிறுவனங்களுக்கு உரிமம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனைகளை (test) மேற்கொள்ள 18 நிறுவனங்களுக்கு மத்திய அரசு உரிமம் (license) வழங்கியுள்ளது.
டிஜிசிஐ ((DGCI) எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு தணிக்கை அமைப்பு, 18 இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு இந்த உரிமத்தை அளித்துள்ளது.
18 நிறுவனங்களில், ஹாடில்லா ஹெல்த்கேர், ஜைடஸ் ஹெல்த்கேர், மெட்சோர்ஸ் ஹெல்த்கேர், கோசாரா டையக்னோஸ்டிக் ஆகியவையும் அடங்கும் என டிஜிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் நிபந்தனையை பூர்த்தி செய்த 18 நிறுவனங்களுக்கு, கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனைக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Comments