அமெரிக்கா - மெக்சிகோ எல்லை தாண்டிய போக்குவரத்து - இரு நாட்டு அதிகாரிகள் ஆலோசனை
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அமெரிக்கா - மெக்சிகோ இடையே வணிகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை பாதிக்காமல் எல்லை தாண்டிய போக்குவரத்துக்கு தடை விதிப்பது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் ஆலோசித்து வருகின்றனர்.
எந்தெந்தக் காரணங்கள் அடிப்படையிலான பயணங்களுக்கு அனுமதி, எவற்றுக்கு அனுமதியில்லை என்பது தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளும் நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதன்படி விவசாயத் தொழிலாளர்கள். உணவகம், மளிகைக் கடை ஊழியர்கள் பேருந்து ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் எல்லை தாண்டி அனுமதிக்கப்படும் நிலையில் சுற்றுலா மற்றும் பொழுதுபொக்கு நோக்கங்களுக்காக செல்பவர்கள், தனிப்பட்ட குடும்பத்தினர், மாணவர்கள், மற்றும் பல முக்கியமற்ற தொழில் சார்ந்தவர்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கனடாவுடனான எல்லை தாண்டிய பயணங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Comments