கொரோனா அச்சுறுத்தலால் கேன்ஸ் திரைப்பட விழா ஒத்திவைப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா, திட்டமிட்டபடி மே மாதம் நடைபெறாது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்சின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் கண்கவர் திரைப்பட விழாவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம்.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும்பொருட்டு பொது நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்குமாறு பிரான்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளதால், மே 12 முதல் 23ம் தேதி வரை நடக்க இருந்த கேன்ஸ் திரைப்பட விழாவை ஒத்திவைத்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
Comments