கோவை - கேரளா எல்லையில் 9 சோதனை சாவடிகளை மூட ஆட்சியர் உத்தரவு
கொரோனா தொற்று எதிரொலியால் இன்று மாலை முதல் தமிழக-கேரள வாகன போக்குவரத்து நிறுத்தப்படுவதாக கோவை ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார்.
கேரளாவில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், கோவை, திருப்பூர், நீலகிரியில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, கேரள மாநில எல்லையோரத்தில் உள்ள கோவை மாவட்டத்தின் அனைத்து சோதனை சாவடிகளையும் மூட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.
வாளையார், முள்ளி, மேல்பாவியூர், வேலந்தபாளையம், வீரப்பகவுண்டனூர், கோபாலபுரம், மீனாட்சிபுரம், வழுக்குப்பாறை, ஆனைகட்டி ஆகிய ஒன்பது சோதனை சாவடிகளும் இன்று மாலை முதல் மூடப்படுகிறது. கோவை மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து கோவைக்கும் இடையேயான அனைத்து போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்படுகிறது.
Comments