பிரதமர் மோடியின் மக்கள் ஊரடங்கு -WHO பாராட்டு

0 11152

கொரோனா தடுப்பில் சமூக விலகியிருத்தலை வலியுறுத்தும் வகையில் பிரதமர் மோடி அறிவித்துள்ள மக்கள் ஊரடங்கு திட்டம்,  தொற்று பரவலை தடுக்க நீண்டகாலம் உதவியாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனமான WHO பாராட்டியுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியாவுக்கான பிரதிநிதியான ஹென்க் பெக்டாம் ((Henk Bekedam)) இவ்வாறு பாராட்டி இருக்கிறார்.

கொரோனா தடுப்பில் கைகளை சானிடைசர் அல்லது சோப் வாயிலாக அடிக்கடி சுத்தம் செய்வது, இருமல், தும்மலை அடுத்தவருக்கு பரவாமல் செய்வது போன்றவற்றுடன், சமூக விலகியிருத்தலையும் கவனமாக பின்பற்றினால் தொற்றை கட்டுப்படுத்தி விடலாம் என அவர் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் 22 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி நேற்று கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments