9 ஆண்டுகளில் ரூ.1,656 கோடி மதிப்பில் செம்மறியாடுகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல்
கடந்த 9 ஆண்டுகளில் 1,656 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 46 லட்சம் வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகள் வழங்கப்பட்டிருப்பதாக கால்நடை பரமாரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய திமுக உறுப்பினர் கிருஷ்ணசாமி, தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவச ஆடு மாடுகளை பாகுபாடின்றி தகுதியான அனைவருக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அனைத்து பயனாளிகளும் பயன்பெறும் வகையில் கால்நடைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய திமுக உறுப்பினர் நேரு, தமிழகத்தில் உள்நாட்டு மாட்டினங்களின் பால் உற்ப்பத்தியை பெருக்க வேண்டும் எனக் கோரினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், உள்நாட்டு மாட்டினங்களின் பால் உற்பத்தியை பெருக்கும் வகையில் வேளாண் பல்கலைக்கழக நிபுணர்களுடன் ஆலோசித்து தேவையான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுவதாக கூறினார்.
Comments