கீரிஸ் நாட்டில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் தீபம்
கீரிஸ் நாட்டில் இருந்து ஜப்பானுக்கு இன்று ஒலிம்பிக் தீபம் கொண்டு வரப்பட்டது.
ஜப்பானில் கொரோனா பீதிக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக முறைப்படி கீரிஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் தீபத்தை எடுத்து வர ஜப்பானில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்றோர், இன்று அங்கிருந்து தீபத்தை எடுத்து வந்தனர். ஜப்பான் சார்பில் 3 முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீராங்கனை சவோரி யோசிதா (Saori Yoshida) நொமுரா ஆகியோர் (Tadahiro Nomura) அந்த தீபத்தை பெற்று கீழே கொண்டு வந்தனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், ஒலிம்பிக் தீபத்தை காண யாரும் வரவில்லை. இதனால் களைகட்ட வேண்டிய பகுதி போதிய உற்சாகமின்றி காணப்பட்டது.
Comments