கொரோனா வைரஸ் முன்னேச்சரிக்கை : மின் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்த வலியுறுத்தல்

0 1511

கொரோனா முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக மின் கட்டணங்களை இயன்றவரை ஆன்லைனில் செலுத்த தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பான செய்திக் குறிப்பில், மின் கட்டணங்களை www.tangedco.gov.in என்ற இணைய தள முகவரியிலோ அல்லது ப்ளே ஸ்டோரில் உள்ள TNEB ஆப் மூலமோ செலுத்தினால் கட்டண மையத்தில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மின் நுகர்வோர் குறைகளை 1912 என்ற இலவச தொலை பேசி எண் மூலமோ, மின் அஞ்சலிலோ தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தொடர்பு எண்களை இணையதளம் மூலம் அறிந்தும் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அனைத்து கட்டண மையங்கள் மற்றும் மின்வாரிய அலுவலகங்களில் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்துத்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

linkl : https://www.tangedco.gov.in/

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments