கொரோனா அறிகுறியுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதி !

0 3679

கும்பகோணம் அரசு மருத்துவமனையில், சவுதி மற்றும் துபாயில் இருந்து திரும்பிய இருவர் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டனர்.

சவுதியிலிருந்து சோழபுரம் திரும்பிய 32 வயது நபருக்கு 4 நாட்களாக இருமல், காய்ச்சல் நீடித்ததால் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

இதே போன்று துபாயிலிருந்து கும்பகோணம் வந்த 45 வயது நபருக்கும் காய்ச்சல், இருமல் நீடித்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

காய்ச்சல், இருமல் அதிகமானதால் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இருவரது ரத்த மாதிரிகளும் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments