மார்ச் 22 ஊரடங்கு உத்தரவு : சாலையோர மக்களை சமூக நலக் கூடங்களில் தங்க அனுமதிக்க உத்தரவு

0 1324

கொரோனா அச்சுறுத்தலால் வரும் 22-ஆம் தேதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள மக்கள் ஊரடங்கை முன்னிட்டு சாலையோர மக்களை சமூக நலக் கூடங்களில் தங்க அனுமதித்து, உணவு வழங்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரும் 22ஆம் தேதி யாரும் வீட்டை விட்டு வெளியேறாமல் மக்கள் ஊரடங்கு நடைமுறையை பின்பற்ற பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் சென்னையில் 9 ஆயிரம் பேர் சாலையோரம் வசித்து வருவதாகவும் ஊரடங்கு அன்று அவர்களை மாநகராட்சி சமுதாய நலக் கூடங்களில் தங்க அனுமதித்து, உணவு வழங்க உத்தரவிடுமாறு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. அதனை ஏற்று அவ்வாறே உத்தரவிட்ட நீதிபதிகள், தனியார் திருமண மண்டபங்களையும் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினர். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments