கொரோனா குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை

0 1029

கொரோனா தொற்று குறித்து வதந்தி பரப்புவோர் சைபர் கிரைம் பிரிவு மூலம் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்படுவர் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.

சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் ஆணையர் விஸ்வநாதன் கலந்துகொண்டார்.

அப்போது, கொரோனா அச்சுறுத்தலால் வேறு பல நாடுகளில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என கூறிய அவர், காவலர்கள் முழு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுடன் பணியாற்றவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments