நிர்பயா வழக்கு: தூக்கிலிடப்பட்டவர்களின் பின்னணி
நிர்பயா பாலியல் பலாத்காரக் கொலை வழக்கில் தூக்கிலிடப்பட்டவர்கள் பள்ளிக் கல்வியைத் தொடர முடியாமல் வாழ்க்கைச் செலவுக்காகத் தொழிலாளர்களாகப் பணியாற்றியவர்கள் ஆவர்.
முகேஷ் சிங் என்பவன் பேருந்தில் உதவியாளராகவும் தூய்மை செய்பவனாகவும் பணியாற்றி வந்தான்.
பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அக்சய் தாக்கூர் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் இடைநின்றவன். இவனுக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.
அண்ணன்மார் இருவரும் உள்ளனர். வினய் சர்மா என்பவன் உடற்பயிற்சிக் கூடத்தில் பணியாற்றியவன். குற்றவாளிகளில் இவன் மட்டுமே பள்ளிப்படிப்பை முடித்தவன்.
ஆங்கிலம் பேசத் தெரிந்தவன். பவன் குப்தா என்பவன் பழம் விற்கும் தொழிலைச் செய்து வந்தான். திகார் சிறையில் இருக்கும்போது பட்டப்படிப்பை முடித்தான்.
திகார் சிறையில் 2013ஆம் ஆண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட ராம்சிங், முகேஷ் சிங்கின் அண்ணன். குற்றம் நடந்த பேருந்தின் ஓட்டுநர் இவன்தான்.
Comments