முதலமைச்சர், அமைச்சர்களுக்கு வெப்பமானி கொண்டு பரிசோதனை

0 2478

சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் காய்ச்சலைக் கண்டறியும் வெப்பமானி கொண்டு சோதனை நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் சென்னைத் தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்துக்கு வந்த முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வுத் தாள்கள் வழங்கப்பட்டன.

கிருமிநாசினி கொண்டு கைகழுவும் முறை குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்குக் காய்ச்சலைக் கண்டறியும் வெப்பமானி கொண்டு சோதனை நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments