நாளை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கமல் நாத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் கமல் நாத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 22 பேரின் ராஜினாமாவைத் தொடர்ந்து கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் தொடர்வதற்கான பெரும்பான்மையை இழந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சட்டப்பேரவை வரும் 26 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், அவையை உடனே கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது.
2 நாட்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கில் நீதிபதிகள் சந்திரசூட், ஹேமந்த் குப்தா அமர்வு தீர்ப்பளித்துள்ளது. எம்.எல்.ஏ.க்கள் கைகளை உயர்த்தி வாக்களிக்க வேண்டும் எனவும், நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.காங்கிரஸ் தரப்பில் கேட்கப்பட்ட 2 வார கால அவகாசத்தையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.
Comments