நிர்பயா வழக்கில் 4 பேரையும் நாளை தூக்கிலிட தடையில்லை: டெல்லி நீதிமன்றம்

0 6992

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் நாளை காலை தூக்கிலிட தடையில்லை என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குற்றவாளிகளாக (convicts)அறிவிக்கப்பட்ட முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்சய் குமார் சிங் ஆகியோரை நாளை அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிட  மரண வாரண்டு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குற்றவாளிகள் 3 பேர் தரப்பில்,  இடைக்கால தடைகோரி தொடரப்பட்ட மனு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 2ஆவது கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டதாகவும், வேறு நீதிமன்றங்களில் மனுக்கள்  நிலுவையில் இல்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களின் மனுவை தள்ளுபடி செய்து, நாளை காலை தூக்கிலிட தடை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதேபோல், உச்சநீதிமன்றத்தில் முகேஷ் சிங், பவன் குப்தா  தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments