பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி புதிய முயற்சி!

0 2624

பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக திறந்த சந்தைகளில் அரசாங்க பத்திரங்களை வாங்கவுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி அனைத்து சந்தைப் பிரிவுகளையும் நிலையானதாக வைத்திருக்கும் வகையில்,ரூ .10,000 கோடிக்கு திறந்த சந்தையில் பத்திரங்களை வாங்கும் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது. COVID-19 தொற்றுநோய்களின் அபாயங்கள் அதிகரித்து வருவதால், நிதிச் சந்தைகளில், நிதி நிலைமைகள் மோசமான சவால்களை எதிர்கொண்டு வருகிவதாகவும், இதனால்,வர்த்தக சந்தைகளில் பொருளாதாரம் கடினமாகி வருவதாகவும் ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவித்ததுள்ளது.

அந்த வகையில், தற்போதைய பரிவர்த்தனைகள் அடிப்படையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மார்ச் மாதத்தில் இதுவரை 3.48 பில்லியன் டாலர் மதிப்பிலான திரும்பபெற்றுள்ளனர். இதன் மூலம் 2020ம் ஆண்டில் திரும்பபெற்றுள்ள முதலீட்டாளர்கள் மதிப்பு 5.04 பில்லியன் டாலாராக உள்ளதாகவும், இந்த தாக்கங்களால், கார்ப்பரேட் பத்திரங்கள் மற்றும் வணிக சந்தைகளில், குறைந்த வர்த்தகங்களுக்கு வழிவகுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2022 முதல் 2025 வரை முதிர்ச்சியடைந்த நான்கு பத்திரங்களை மொத்தம் 100 பில்லியன் விலை அடிப்படையிலான ஏலம் மூலம் வாங்கப்போவதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments