ஊழியர்கள் சம்பளத்தை குறைத்த இண்டிகோ ஏர்லைன்ஸ்
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, இண்டிகோ ஏர்லைன்ஸ் தனது ஊழியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளது.
கொரோனா வைரஸால் கடுமையாக தாக்கப்பட்டதில், பட்ஜெட் கேரியர் இண்டிகோ இன்று மூத்த ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. இன்று காலை இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்கு, அதன் தலைவர் ஆஷிம் மித்ரா மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் பொருளாதார சூழல் குறிப்பிடத்தக்க அளவு மோசமடைந்துள்ளதாகவும், இந்த மோசமான சரிவில் எந்த நிறுவனமும் பாதிக்கப்படாமல் இருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.இதனால் அடுத்த சில நாட்களில் சில கடினமான முடிவுகளை எடுத்துச் செயல்படுத்த வேண்டியிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தற்போது, இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜோய் தத்தா, மூத்த துணைத் தலைவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் 20% ஊதியக் குறைப்பை மேற்கொண்டு வருவதாகவும், துணைத் தலைவர்கள் மற்றும் காக்பிட் குழுவினர் 15% ஊதியக் குறைப்பை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், bands A and B ஊழியர்களுக்கு ஊதியம் குறைக்கப்படுவதாகவும், மிகுந்த தயக்கத்துடனும், ஆழ்ந்த வருத்தத்துடனும், இந்த ஊதிய குறைப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக ஆஷிம் மித்ரா தெரிவித்துள்ளார்.
Comments