சிலிண்டரில் மின்கசிவு... கடைகள் மற்றும் வாகனங்கள் தீக்கிரை - ஓசூரில் பரபரப்பு

0 1733

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மிகப்பெரிய எரிவாயு சிலிண்டரில் மின்கசிவு ஏற்பட்டதால் அதை ஏற்றிச் சென்ற மினி லாரி, சுற்றுவட்டாரத்தில் இருந்த கடைகள் மற்றும் வாகனங்கள் தீக்கிரையாகின.  

கிருஷ்ணகிரி அலசநத்தத்தில் உள்ள தனியார் கேஸ் குடோனில் இருந்து தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சுமார் 450 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டரை ஏற்றிக்கொண்டு ஓசூர் நோக்கி சென்ற மினி லாரி, வேகத்தடையில் ஏறி இறங்கியபோது அதில் இருந்த சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிலிண்டரில் பற்றிய தீ லாரியில் பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது.

ஓட்டுநர் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு இறங்கி தப்பியநிலையில், தீ அருகில் இருந்த கடைகள் மற்றும் வாகனங்களுக்கு பரவியது. இதில் இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வாகனங்களும் 12க்கும் மேற்பட்ட கடைகளும் கொளுந்துவிட்டு எரிந்து நாசமாயின.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஆங்காங்கே எரிந்துக்கொண்டிருந்த தீயை நீண்ட முயற்சிக்கு பிறகு அணைத்தனர். இதில் பெண் உள்பட 3 பேர் தீக்காயமடைந்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments