மும்பையில் வாக்கிங், ஜாக்கிங், குழு சுற்றுலாவுக்கு தடை
மும்பை நகர சாலையோரங்களில் வாக்கிங் மற்றும் ஜாக்கிங் செல்வோரை அப்புறபடுத்தி வரும் போலீஸார், குழு சுற்றுலாவுக்கும் தடை விதித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் கொரோனா பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மும்பை நகர சாலையோரங்களில் வாக்கிங் மற்றும் ஜாக்கிங் செய்யக் கூடாது என்று மக்களை போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மும்பையிலுள்ள சுற்றுலா இடங்களுக்கு மக்களை குழுவாக அழைத்து செல்லக் கூடாதென தனியார் சுற்றுலா ஆப்பரேட்டர்களுக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர்.
அரசு பேருந்துகள், பள்ளி பேருந்துகளில் இருக்கைகளில் அமர இடம் இல்லாத காரணத்தினால், இடைவெளியில் கூட்டமாக மக்கள் நின்று செல்லக்கூடாது என்றும் போலீஸார் தடை விதித்துள்ளனர்.
Comments