தேஜஸ் மார்க் 2 விமானங்களால் பாலக்கோட் தாக்குதல் போன்ற தாக்குதல்களை நிகழ்த்த முடியும் என தகவல்

0 1239

உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேஜஸ் மார்க் - 2 போர்விமானங்களால் பாலக்கோட்  தாக்குதலை போன்ற தாக்குதல்களை நிகழ்த்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தேஜஸ் மார்க் - 1 ரக போர்விமானங்கள் திருப்திகரமாக செயல்படுவதாக தெரிவித்துள்ள போர்விமானங்களுக்கான மேம்பாட்டு அமைப்பின் திட்ட இயக்குநர், அவற்றை விஞ்சும் வகையில் தேஜஸ் மார்க் - 2 விமானங்களின் திறன் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

GE 414 என்ஜின்களுடன் வடிவமைக்கப்படும் இந்த விமானங்களில், 150 கி.மீ தூர எல்லைக்குள் கண்களுக்கு புலப்படாத தொலைவிலுள்ள இலக்குகளையும் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளும் பொருத்தப்படவுள்ளன.

2022ல் உற்பத்தி முடிந்து 2023ல் வான்வெளியில் பறக்கவுள்ள இந்த விமானங்கள் 2026ம் ஆண்டில் விமானப்படையில் இணைக்கபடவுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments