நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய கன்னியாகுமரி வந்த புதுச்சேரி போலீசார்
நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய கன்னியாகுமரியிலுள்ள அவரது வீட்டிற்கு புதுச்சேரி போலீசார் வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது புதுச்சேரி ஆளுநர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த தவளக்குப்பம் போலீசார், அவர் விசாரணைக்கு ஆஜராகததால் கைது செய்வதற்காக வந்தனர்.
21ம் தேதி வரை அவகாசம் இருப்பதாகக் கூறி நாஞ்சில் சம்பத் அதற்கு உடன்பட மறுத்த நிலையில், அவரது ஆதரவாளர்களும், வழக்கறிஞர்களும் அங்கு குவிந்தனர்.
இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து நாஞ்சில் சம்பத்தை அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து அழைத்து சென்றனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னை சிறையில் அடைக்க சதி நடப்பதாக தெரிவித்தார்
Comments