பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்க உத்தரவு..!

0 5587

செமஸ்டர் தேர்வுகளையும், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளையும் மார்ச் 31ஆம் தேதிக்குப் பின் தள்ளி வைக்குமாறு அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு, அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்துத் தேர்வுகளையும் மார்ச் 31ஆம் தேதிக்குப் பிந்தைய நாட்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளையும் மார்ச் 31ஆம் தேதிக்குப் பிந்தைய நாட்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் அச்சப்பட வேண்டாம் என அறிவுறுத்துமாறும் பல்கலைக்கழக மானியக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments