ரிலையன்ஸை பின்னுக்குதள்ளி மதிப்புமிக்க நிறுவனமாக மாறிய டாடா

0 1540

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தை முந்தி சந்தை மதிப்பீட்டால் மிகவும் மதிப்புமிக்க இந்திய நிறுவனமாக மாறியது.

நேற்றைய பங்குசந்தை BSE வர்த்தகம் முடிவடையும் போது, TCS-ன் சந்தை மூலதனம் (Mcap) ரூ .6,19,499.95 கோடியாக இருந்தது. இது Reliance நிறுவனத்தின் ரூ .6,14,179.93 கோடி மதிப்பீட்டை விட ரூ .5,320.02 கோடி அதிகமாக உயர்ந்தது. இந்த நிலையில், பங்கு சந்தைகளில், Reliance நிறுவனத்தின் பங்குகள் விற்பனை வீழ்ச்சியை சந்தித்தன.

இதனையடுத்து, 3.97% சரிந்து பங்கு சந்தை முடிவின்போது, ரூ.968.85 ஆக இருந்தது.அதேபோல், TCS இன் பங்குகளும் 0.44% சரிந்து 1,650.95 ரூபாயாக இருந்தது. மார்ச் 9 ஆம் தேதி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், Mcap -ல் முந்தைய மிகவும் மதிப்புமிக்க உள்நாட்டு நிறுவனமாக இருந்த RIL ஐ முந்தியது. மேலும், கடந்த சில நாட்களாக, பங்குச் சந்தையில் விற்பனையானது ரிலையன்ஸ் நிறுவன சந்தை மதிப்பீட்டைக் கடுமையாக தாக்கி வருகிறது. அதேபோல், சர்வதேச கச்சா எண்ணெய் விலை சரிவால், ரிலையன்ஸ் பங்குகளின் விற்பனை ஏமாற்றத்தை சந்தித்தன.

இந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக ரிலையன்ஸ் பங்குகளின் விற்பனை சரிந்து 12.47% குறைந்தது, மூன்று நாட்களில் சந்தை மதிப்பீட்டில் இருந்து RIL-ன் ரூ .87,506.07 கோடி ரூபாய் காணாமல்போனது. இதனையடுத்து, 4 மாத ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எம்-கேப் ஆனது கடந்த ஆண்டு நவம்பரில் எட்டியிருந்த 10 லட்சம் கோடியிலிருந்து கடுமையாக சரிந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக, டிசிஎஸ், ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கிடையில் சந்தை மூலதனத்திற்கு கடுமையான போட்டிகள் நிலவி வந்தன. அதில், நேற்று பங்கு சந்தை வர்த்தகம் முடிவடையும் போது டிசிஎஸ் முதலிடத்தை பிடித்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments