YES BANK சேவைகள் முற்றிலும் சீரானது
யெஸ் வங்கி சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு, பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் 5 ம் தேதி, வாராக்கடன் புகாரில் சிக்கிய யெஸ் வங்கி, அதன் முன்னாள் தலைவர் ராணாகபூரை கைது செய்தது. இதனையடுத்து ரிசர்வ் வங்கி யெஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டில் எடுத்தது. அப்போது, வாடிக்கையாளர்கள் மாதம் 50000 வரை மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுபாடுகளை விதித்திருந்தது. இந்த நிலையில், மத்திய அரசு கடந்த வாரத்தில், வங்கியை புதுப்பிக்கும் திட்டத்தை செயல்படுத்தியது.
இதனையடுத்து, நேற்று மாலை 6 மணி முதல் வங்கி சேவைகள் அனைத்தும் முற்றிலுமாக பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. இதில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலைமையிலான கூட்டமைப்பு யெஸ் வங்கிக்கு 10000 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. அதில், எச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா ஆகியவற்றின் முதலீடுகள் அடங்கும். வங்கியின் மார்ச் 14ம் தேதி வரையிலான டிசம்பர் காலாண்டு இறுதியில் 18654 கோடி இழப்பை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments