முழு அடைப்புக்கு தயாராகி வரும் பிரிட்டனில் இருந்து இந்திய மாணவர்கள் மீட்கப்படுவார்களா ?
இங்கிலாந்தில் உள்ள ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் திரும்பி வர வழியின்றி தவிக்கின்றனர்.
அந்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க முழு அளவு அடைப்பு தவிர்க்க முடியாததாகி விட்டதால் அவர்களால் வெளியேற முடியவில்லை. தங்கள் படிப்பில் பாதியளவே நிறைவு செய்த நிலையிலும் உயிர் குறித்த அச்சத்தால் வெளியேற விரும்பினாலும் தற்காலிகமாக அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய தூதரகம் மற்றும் மாணவர் அமைப்புகளுக்கு தொலைபேசி மூலமாக இவர்கள் அபயக் குரல் எழுப்பி வருகின்றனர். மார்ச் 18 முதல் 31 வரை பிரிட்டனில் இருந்து யாரும் இந்தியாவுக்குள் வர அனுமதி கிடையாது என்று இந்திய அரசு தடை அறிவித்துள்ளது. இது தங்களுக்கும் பொருந்துமா என்று புரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். தடை அறிவிக்கப்படும் முன்பு இரண்டு நாட்களாக விமான டிக்கெட்டுகளை வாங்குவதற்காக போட்டி நிலவியது. இதனால் விமானக் கட்டணங்களும் கடுமையாக உயர்ந்தன.
Comments