அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அனில் அம்பானி
எஸ் வங்கிப் பண மோசடி வழக்கில் ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
ரிலையன்ஸ் குழுமத்துக்கு எஸ் வங்கி வழங்கிய 12 ஆயிரத்து 800 கோடி ரூபாய் கடன், வாராக்கடன் பட்டியலில் உள்ளது. இதற்குக் கைம்மாறாக எஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் குடும்பத்தினரின் நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் குழுமம் ஆயிரத்து 100 கோடி ரூபாய் கடன் வழங்கியதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானி மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகினார்.
எஸ் வங்கியிடம் ரிலையன்ஸ் பெற்ற கடன்கள், ராணா கபூரின் குடும்பத்தினரின் நிறுவனத்துக்கு ரிலையன்ஸ் கொடுத்த கடன்கள் ஆகியவை குறித்து அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறையினர் விளக்கம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
Comments