சரவணா ஸ்டோர் மேலாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
மாநகராட்சி அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகச் சென்னைப் புரசைவாக்கம் சரவணா ஸ்டோர் மேலாளர் குருநாதன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காமலும், அரசு உத்தரவை மீறியும் புரசைவாக்கத்தில் சரவணா ஸ்டோர் திறக்கப்பட்டிருந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் அங்குச் சென்று கடையை மூடினர். அப்போது சரவணா ஸ்டோர் மேலாளர் குருநாதன், அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்ததுடன் தகாத சொற்களால் பேசியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சுகாதார ஆய்வாளர் அலெக்ஸ் பாண்டியன் வேப்பேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், அரசு அதிகாரிகளைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல், முறையற்றுத் தடுத்தல், ஆபாசமாகப் பேசுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் சரவணா ஸ்டோர் மேலாளர் குருநாதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments