குரல் தழுதழுக்க ஜெயலலிதாவை நினைவு கூர்ந்த அமைச்சர் செல்லூர் ராஜு
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் செல்லூர் ராஜு, குரல் தழுதழுக்க ஜெயலலிதாவை நினைவு கூர்ந்தார்.
சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவுத்துறை மீதான மானிய கோரிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு, ஜெயலலிதா நினைவிடத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எளிய மக்களுக்கு உதவும் கூட்டுறவுத்துறையை தன்னை நம்பி 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா ஒப்படைத்ததாகவும், அவரை இழந்துவிட்டோம் என்றும் உருக்கமாக தெரிவித்தார்.
Comments