இந்திய பங்குச்சந்தைகளில் இன்றும் கடும் சரிவு
இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் கடும் சரிவைச் சந்தித்தன.
உலக அளவில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால், பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம் என்ற அச்சம் பங்குச்சந்தைகளில் தொடர் சரிவுக்கு வித்திட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகள், ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்படும் சரிவு இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலிக்கிறது.
கடந்த 13ஆம் தேதி, நிஃப்டி, சென்செக்ஸ் புள்ளிகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்ததால், வர்த்தகம் ஒரு மணி நேரத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டது. இந்த சரிவு தொடரும் நிலையில், இன்றைய காலை வர்த்தகத்தின்போது, சென்செக்ஸ் 1800 புள்ளிகள் அளவுக்கும், நிஃப்டி 500 புள்ளிகளுக்கு அதிகமாகவும் சரிந்து, 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கீழே சென்றது. சென்செக்ஸ் 27 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும், நிஃப்டி 8 ஆயிரத்து 500 புள்ளிகளுக்கு கீழும் சென்றதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Comments