சரத்பவார், ராம்தாஸ் அத்வலே மாநிலங்களவைக்கு தேர்வு

0 1956

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வலே உள்ளிட்ட 37 பேர், மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

மாநிலங்களவையில் காலியான 55 இடங்களுக்கு 26ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் 7 பேரும், தமிழகத்தில் 6 பேரும், ஹரியானா, சட்டீஸ்கர், தெலுங்கானாவில் தலா 2 பேரும், ஒடிசாவில் 4 பேரும், பீகார், மேற்கு வங்கத்தில் தலா 5 பேரும், அசாமில் 3 பேரும், இமாசலில் ஒருவரும் என மொத்தம் 37 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டோரில் சரத் பவார், ராம்தாஸ் அத்வாலே, சிவசேனா மூத்த தலைவர் பிரியங்கா சதுர்வேதி ஆகியோர் முக்கியமானோர் ஆவர். 37 பேரில் பாஜக சார்பில் 7 பேரும், காங்கிரஸ் , திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் சார்பில் தலா 4 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments