கொரோனா -தினக்கூலி பெறும் தொழிலாளர்களின் நலன்காக்க மாநில அரசுகள் முடிவு
தினக்கூலி பெறும் தொழிலாளர்களின் நலன்களை காக்க மகாராஷ்ட்ரா மற்றும் உத்தரப்பிரதேச அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
கடந்த 2017-18ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுமார் 9 கோடியே 30 லட்சம் பேர் தினக்கூலிகளாகவும் குறிப்பிட்ட காலத்திற்கான கூலியைப் பெறுபவர்களாகவும் உள்ளனர். கோவிட் 19 நோய் பரவலால் பொருளாதார நிலைமை கடுமையான பாதிப்புக்குள்ளாகும் சூழலில் தினக்கூலி பெறும் தொழிலாளர்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.
இத்தகைய தொழிலாளர்களுக்கு எழுத்துப் பூர்வமான பணி ஒப்பந்தம், ஊதியத்துடன் கூடிய விடுமுறை, சமூக பாதுகாப்பு, பயன்கள் ஏதுமில்லை. பி.எப், பென்சன், பணிமூப்புத் தொகை, சுகாதார வசதிகள், கர்ப்பகால பயன்கள் என எதுவும் இவர்களுக்கு கிடைப்பதில்லை. தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் இத்தகைய தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர்.
Comments