பிரிட்டனில் இந்திய மருத்துவர்கள் - செவிலியருக்கு பாதுகாப்பு இல்லையா..?

0 983

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 600 ஐ தாண்டிவிட்டது. 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிசோதிக்கப்பட்டு 2626 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக பிரிட்டனின் பவுண்டு மதிப்பு கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டது. கொரோனா இழப்புகளில் இருந்து மீள போரிஸ் ஜான்சன் அரசு 330 பில்லியன் பவுண்டு நிதியை ஒதுக்குவதாக அறிவித்த போதும் பவுண்டின் சரிவை தடுக்க முடியவில்லை.

இதனிடையே பிரிட்டனில் கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டிருக்கும் ஏழு இந்திய மருத்துவர்கள் தங்களுக்கு பரிசோதனை நடத்தப்படவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். ஏராளமான இந்திய மருத்துவர்களும் செவிலியர்களும் பிரிட்டனில் சேவை புரிந்து வரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பிரிட்டன் அரசுக்கு மருத்துவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments