குடியிருப்பு பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் : தக்க பதிலடி கொடுத்த இந்தியா

0 1188

காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.

வடக்கு பூஞ்ச் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் அருகில் உள்ள மசூதியைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறிய ரக ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமில்லை என்ற போதும் தாக்குதல் தொடர்ந்த வண்ணம் இருந்தது.

இதையடுத்து இந்திய ராணுவத்தினர் திருப்பித் தாக்கியதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள்ளன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments