கொரோனாவுக்கு தடுப்பூசி சோதனை நம்பமுடியாத சாதனை - டெட்ரோஸ்

0 9505

கொரோனா தொற்றுக்கு 60 நாட்களில் தடுப்பூசி சோதனை செய்யப்பட்டது மிகப் பெரும் சாதனை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம், கொரோனாவை முன்னறிவிப்பில்லாத எதிரி என்றும் உலகத்தினர் அனைவருக்கும் பொதுவான எதிரி என்றும் வர்ணித்தார்.

கொரோனா பாதிப்புத் தொடங்கி 60 நாட்களுக்குள் அதற்கான தடுப்பூசி சோதனை செய்யப்பட்டது நம்பமுடியாத மிகப் பெரும் சாதனை என்றும் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

இதற்காக பாடுபட்ட ஆராய்ச்சியாளர்களைத் தாங்கள் பாராட்டுவதாகக் குறிப்பிட்ட அவர், கொரோனாவுக்கான எதிர் போட்டியில் உலகம் இறுதியில் வெற்றி பெறும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments