மொபைல் தகவல் பரிமாற்றம் மூலம் கண்காணிக்கப்படும் மக்கள் நடமாட்டம்
இத்தாலி, ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற நாடுகளின் மொபைல் சேவை வழங்குவோர் கொரோனா குறித்த தகவல் பரிமாற்றங்களை செய்து வருகின்றனர்.
ஐரோப்பாவின் தனிநபர் சட்டத்தை மீறாமல், மக்களின் உடல் நலம் கண்காணிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவிய பகுதிகளில் மக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க இந்த தகவல் பரிமாற்றம் உதவுகிறது.
சீனா, தைவான், தென் கொரியா போன்ற பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களை மொபைல் மூலம் தொடர்பு கொண்டு அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.
ஜெர்மனியில் பள்ளிகளும் உணவகங்களும் மூடப்பட்டு மக்கள் வீட்டில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க மொபைல் தகவல் பரிமாற்றம் உதவுகிறது.
Comments