சீன வைரஸ் என்று கூறியது ஏன்..? அதிபர் டிரம்ப் விளக்கம்
கொரோனாவுக்கு எதிராக போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும் அவர் வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்காவில் பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை அமல்படுத்துவதாக கூறிய அவர் முகக் கவசங்கள், சுவாசப் பைகள், வெண்டிலேட்டர்கள் போன்றவற்றை அதிக அளவில் உற்பத்தி செய்ய உத்தரவிட்டுள்ளார்.
கண்ணுக்குத் தெரியாத எதிரியை ஒழித்துக் கட்டுவோம் என்றும் அவர் சூளுரை செய்தார். தெற்கு எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறும் அகதிகளை திருப்பி அனுப்பவும் சட்டம் உறுதி செய்யப்படுவதாக டிரம்ப் அறிவித்தார்.
மருத்துவமனைகளாக மாற்றப்பட்ட இரண்டு கப்பல்களில் ஒரு கப்பல் நியுயார்க்கிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் மற்றொரு கப்பல் மேற்கு கரை பக்கம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
கொரோனா வைரசை தாம் சீன வைரஸ் என்று கூறியது இனவெறிக்காக அல்ல என்று தெளிவுபடுத்திய அவர் இந்த தொற்றுநோய் சீனாவில் இருந்து வந்தது என்ற அர்த்தத்தில் கூறியதாக தெரிவித்தார்.
Comments