காஞ்சிபுரம் அருகே தி.மு.க பிரமுகர் உடன் திருமணத்துக்கு மீறிய உறவு.. மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவர்
காவல் நிலையங்களை தூய்மையாக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது - ஏ.கே.விஸ்வநாதன்
சென்னை காவல் துறை சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாமினை மாநகராட்சி காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்ட இந்த விழிப்புணர்வு மருத்துவ முகாமில் பயணிகளுக்கு முக கவசங்கள் வழங்கப்பட்டதோடு, முறையாக கை கழுவுவது தொடர்பாகவும் பயணிகளுக்கு மருத்துவ குழுவினர் விளக்கமளித்தனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏ.கே.விஸ்வநாதன், காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்பு வளாகங்கள் போன்றவற்றை தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Comments